நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் முக. ஸ்டாலின்

அக் 04,சென்னை, நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திருவாரூரை அடுத்த காட்டூரில் மறைந்த திமுக தலைவர் கருணாநி தியின் நினைவாக அருங்காங்காட்சியகம் கட்ட முடிவு செய்யப்பட்டு, அதற்கான நிலம் மு.க.ஸ்டாலின், அவரது சகோதரி செல்வி ஆகியோரின் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. அ ந் த நிலத்துக்கான பத்திரப் பதிவு திருவாரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், தமிழகத்தில் நீட் தேர்வில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த மோசடியில் வெளிமாநில தரகர் மட்டுமல்லாது தமிழகத்தை சேர்ந்த தரகர்களும் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வந்திருப்பதாகத் தெரிவித்தார். இந்த முறைகேட்டுக்கு சில அதிகாரிகளும் உடந்தையாக உள்ளதாக குறிப்பிட்ட ஸ்டாலின், நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தினால் சரியாக இருக்காது என்றும், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நீட்தேர்வில் திமுகவுக்கு உடன்பாடு கிடையாது என்றும், முறைகேடு நடைப்பெற்றுள்ளதால் அதுகுறித்து விசாரணை நடத்த தி மு க கோருகிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 2 ம் ஆண்டு நினைவு நாளன்று காட்டூரில் அருங்காட்சியகம் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார். திருவாரூர் மருத்துவ கல்லூரியில் உள்ள மருத்துவ உபகரணங்களை புதுக்கோட்டைக்கு மாற்றுவதை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.