நித்தியானந்தா எங்கு உள்ளார்? டிச. 12க்குள் தெரிவிக்க உத்தரவு


நித்தியானந்தா எங்கு உள்ளார் என்பதை கண்டறிந்து வரும் 12ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கர்நாடக போலீசாருக்கும், அம்மாநில அரசுக்கும் பெங்களூரு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கு பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராம்நகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பாலியல் வழக்கில் 44 முறை நித்தியானந்தா நேரில் ஆஜராகவில்லை என குற்றம்சாட்டப்பட்டது.


எனவே வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் லெனின் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து நித்தியானந்தா எங்கு உள்ளார், என்ன செய்கிறார் என்பன குறித்த விவரங்களை வரும் 12ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கும் போலீசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.