உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு


உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, உச்சநீதிமன்றம், ஜனநாயகத்தை காத்திடும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியிருப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.


சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை, முதலமைச்சரைப் போன்று தாமும் வரவேற்பதாக தெரிவித்திருக்கிறார்.


உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்றே திமுக வலியுறுத்துவதாகவும், ஆனால், தேர்தல் நிறுத்தப்பார்ப்பதாக, திமுக மீது திட்டமிட்டு பொய் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவதாகவும், மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.