சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஒரு நான்கு நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை சிவகங்கை நகர் கோகலேஹால் தெருவில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவரின் ஓட்டுவீடு திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த ராஜேந்திரன், அவரது மனைவி வள்ளி மற்றும் பக்கத்து வீட்டுப் பெண் முத்துலட்சுமி ஆகியோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நிவாரணம் வழங்குவதற்காக வருவாய்த்துறையினர் சேத விவரம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
சிவகங்கையில் மழை காரணமாக வீடு இடிந்த விபத்தில் இரு பெண்கள் உட்பட 3 பேர் காயம்