உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவளிக்கவில்லை - ரஜினி மக்கள் மன்றம்


தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில், நடிகர் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. எனவே ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் வாக்கு சேகரித்தால் சட்டப்படி  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் மக்கள் மன்றத்தின் கொடியையோ, ரஜினியின் பெயர் மற்றும் புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.