கடலூரில் பொது சுகாதாரத் துறை சார்பாக வெள்ள நிவாரண மருத்துவ முகாம்



































கடலூர் .டிசம்பர் .5. கடலூரில் பாதிரிகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான கூத்தப்பாக்கம் பகுதிகளில்பொது சுகாதாரத்துறை நடுவீரப்பட்டு நடமாடும் மருத்துவ குழுவினர் சார்பாக பாதிரிக்குப்பம் ராமநாதன் நகர் நகர் விஜயலட்சுமி நகர் நாதன் நாயகி நகர் ஆகிய பகுதிகளில் நேற்று வெள்ள நிவாரண மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த வெள்ள நிவாரண மருத்துவ முகாம் நடுவீரப்பட்டு நடமாடும் மருத்துவக் குழுமருத்துவர் தீபன் தலைமையில் பொது சுகாதாரத்துறை சுகாதார ஆய்வாளர் ஹேமலதா செவிலியர் உமாசங்கரி சுகாதார உதவியாளர் வீரன் ஊர்தி ஓட்டுநர் வீரர் குமார் ஆகியோர் தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது.இந்த மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு காய்ச்சல் மற்றும் இதர நோய்களுக்கு சிகிச்சை  கொடுக்கப்பட்டது .இந்த பரிசோதனையில் பொதுமக்கள் சுமார் 150க்கும் மேற்பட்ட வர்களுக்கு சிகிச்சை அளிக்க பட்டது . காய்ச்சல் சளிக்கான மருந்துகளும் வழங்கப்பட்டன. தொடர்ந்து கடலூர் பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.


 

 




 




 






 

 




 




 


 



 



 















ReplyForward