சாவை தொட்ட முதியவரை, காலனிடம் இருந்து காப்பாற்றிய காவலரின் மனிதநேய செயல், சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.
சில தினங்களுக்கு முன்பு வண்ணாங்கோவில் பகுதியில் மனைவி மற்றும் பேரனுடன் முதியவர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஜீப் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் முதியவர் உடல் அசைவற்றநிலையில் இறந்து விட்டதாக நினைத்து உறவினர்கள் பதற்றமடைந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராம்ஜிநகர் காவல்நிலைய காவலர் பிரபு, முதியவரின் நாடி பிடித்து பார்த்து உயிர் இருப்பதை அறிந்து, உடனடியாக முதல் உதவி அளித்து, சுவாசம் அளித்துள்ளார்.
அதன் பலனாக முதியவர் கண்விழித்ததுடன்,எழுந்து அமர்ந்தார்.இந்த நிகழ்வை அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டு ஒருவர் வீடியோ எடுத்து டிக்டாக் செயலியில் பதிவேற்றம் செய்ய அது வாட்ஸ் அப் குழுக்களில் வைரல் ஆகியுள்ளது.
இது போன்ற அவசர காலங்களில் காவலர் பிரபவின் சமயோசித முதல் உதவியால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் பாராட்டி உள்ளனர். சேவைமனப்பான்மை கொண்ட காவலர் பிரபு குண்டும் குழியுமாக கிடக்கும் சாலைகளை தானே மண்ணை நிரப்பி சரிசெய்வதுடன், சக காவலர்களுடன் மரங்களை நட்டும் வளர்த்து வருகிறார்.