திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 8ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள்ளாட்சி மன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்காக கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வரும் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில், சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.