தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.
குடிமக்களின் அந்தரங்க உரிமைகளை சமரசம் செய்து கொள்ளும் விதத்தில் மசோதா இருப்பதாக குற்றம்சாட்டி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் வலியுறுத்தினார்.
இதையடுத்து, இரு அவைகளின் கூட்டு தேர்வுக்குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முன்மொழிந்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக தேர்வுக்குழு மசோதா தொடர்பாக அறிக்கை அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.