தேர்தலை கண்டு திமுக அஞ்சியது இல்லை என்றும், உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தியதாகவும், அதை உச்சநீதிமன்றம் ஏற்று கொண்டு சில அறிவுரைகளை வழங்கியதாக கூறினார்.