ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பாலகிருஷ்ணன், முத்தரசன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் சந்தித்து பேச்சு


ஊரக உள்ளாட்சி தேர்தல் இடப் பகிர்வு தொடர்பாக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநில நிர்வாகிகள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினர்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், நாளைக்குள் இடப்பகிர்வு முடிந்துவிடும் என்றார்.


இதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட நிர்வாகிகளும், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஊரக உள்ளாட்சி தேர்தல் இடப் பகிர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.