வெங்காயத்தை தொடர்ந்து முருங்கை காய் விலையும் உயர்வு...

தமிழகத்தின் பல ஊர்களிலும் வெங்காயம் உள்ளிட்ட ஒரு சில காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வெங்காயம் வருகிறது.

மேலும் ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் லாரி லாரியாக வெங்காயம் வரவழைக்கப்படுகிறது. இந்நிலையில் வெங்காய வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் விலை அதிகரித்துள்ளது. நேற்று 140 ஆக இருந்து ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை, இன்று 10 ரூபாய் உயர்ந்து 150-க்கு விற்பனையானது.

கோயம்பேடு சந்தையில் கிலோ 150 ரூபாய்க்கு விற்கப்படும் வெங்காயம் சில்லறை விற்பனைக்கு வரும் போது மேலும் விலை உயர்ந்து கிலோ 160 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சில கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் கிலோ 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக மக்கள் கூறியுள்ளனர்.

இதே போல கோயம்பேடு சந்தையில் கிலோ 160 ரூபாய்க்கு விற்பனையாகும் சின்ன வெங்காயம் சில்லறை விற்பனையில் கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 2 நாட்களாக கோயம்பேடு மார்கெட்டிற்கு 30 லாரிகளில் வெங்காயம் விற்பனைக்கு வந்த நிலையில் இன்று 28 லாரிகளில் மட்டுமே வந்துள்ளது. இதன் காரணமாகவே வெங்காயம் விலை அதிகரித்ததாக வியாபாரிகள் கூறி உள்ளனர்.

இதே போன்று கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ முருங்கைகாய் 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு முருங்கைக்காய் 30 ரூபாய் என்ற விலையில் சில்லரையில் விற்பனை செய்யப்பட்டது.

இதே போன்று திண்டுக்கல் சந்தையில் ஒரு கிலோ முருங்கைகாய் தரத்திற்கு ஏற்ப 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனையானது. ஒட்டன்சத்திரம் சந்தையில் ஒரு கிலோ முருங்கைகாய் தரத்திற்கு ஏற்ப 260 ரூபாய் முதல் 290 ரூபாய் வரை விற்பனையானது. 