பாதிரிக்குப்பம் குமார பேட்டையில் மழைநீர் வெளியேற்றம். பொதுமக்கள் பாராட்டு







.கடலூர். டிசம்பர் 4. கடலூர் அருகே பாதிரிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட குமார பேட்டை ஆதிபராசக்தி நகர் முத்தமிழ் நகர் விஜபி நகர் உள்ளிட்ட ஐந்து நகர்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக வடிகால் இல்லாத காரணத்தினால் மழைநீர் நகர் முழுவதும் வடியாமல் 3 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கியிருந்தது. பொதுமக்கள் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனத்தில் சாலையில் செல்ல முடியாத நிலை இருந்தது. நேற்று அரிசி பெரியகுப்பம் ஊராட்சி செயலாளர் யோகேஸ்வரன் தலைமையில் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வடிகாலாக பள்ளம் தோண்டி நீர் வடிய வழி செய்தார்கள். இந்த வடிகால் வசதி செய்யும்போது முன்னாள் சத்துணவு மாநில தலைவர் அனுசியா உன்னால் அரிசி பெரியகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ஆரங்கி முன்னாள் ஒன்றிய செயலாளர் ராதா முருகேசன் சம்பத் ரவிக்குமார் நேரு சிவசங்கர் பாலமுருகன் மற்றும் குமார ப்பட்டை ஆதிபராசக்தி நகர் தலைவர் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் சபரி மெடிக்கல் உரிமையாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.