கொள்ளைப்புறம் வழியாக உள்ளாட்சி பதவிக்கு வர யாரும் முயற்சிக்கக்கூடாது


உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடுவதை தடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு  சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


மகாகவி பாரதியாரின் 138வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காமராஜ் சாலையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, பாண்டியராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.


அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார்,  உள்ளாட்சி பதவிகளுக்கு கொள்ளைப்புறம் வழியாக வர யாரும் முயற்சிக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.