குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு - துணை முதலமைச்சர்


குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை அதிமுக ஆதரிப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை கூறினார். உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று அவர் குறிப்பிட்டார்.  உள்ளாட்சி தேர்தலை கண்டு திமுக அஞ்சுவதாக அவர் தெரிவித்தார்.