வைகை அணையில் இரண்டாம் கட்ட வெள்ள எச்சரிக்கை


வைகை அணை நீர்மட்டம் 68 அடியை எட்டியதைத் தொடர்ந்து 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அணையின் நீர் மட்டம் 68 அடியை எட்டியதால் கரையோரம் வசிப்போருக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாதுகாப்பான இடங்க ளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர். ஆற்றை கடக்க வேண்டாம். வெள்ளத்தை வேடிக்கை பார்க்க வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.


71 அடி முழு கொள்ளளவு கொண்ட வைகை அணையில் 69 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது. 69 அடியை எட்டியதும் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்படும். தற்போது அணைக்கு வினாடிக்கு 2775 கன அடி வீதம் நீர் வரும் நிலையில் வினாடிக்கு 160 கன அடி வீதம் நீர் திறக்கப்படுகிறது.