திக்குறிச்சி ஆலயத்தில் கொள்ளை போன ஐம்பொன் சிலை மீட்பு


கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சியில் பிரசித்திபெற்ற மகாதேவர் ஆலயத்தில் கொள்ளையடிக்கப்பட்டு, கேரளாவில் பதுக்கி வைத்திருந்த, ஐம்பொன் சிலையை மீட்ட போலீசார், ஒரு பெண் உட்பட நான்கு பேரை கைது செய்தனர்.


கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ம் தேதி மகாதேவர் உற்சவ மூர்த்தி ஐம்பொன்சிலை, உள்ளிட்ட சிலைகள், கொள்ளையடிக்கப்பட்டது. 
இதுதொடர்பாக திருவனந்தபுரம் பீமா பள்ளியைச் சேர்ந்த ஷா நவாஸ் என்பவனை போலீசார் கைது செய்தனர்.


அவன் தனது நண்பன் உசேன், தோழி சுமிதா ஆகியோருடன் சேர்ந்து, சிலைகளை திருடி கேரளாவுக்கு தப்பிச்சென்றதும், அவற்றை புராதன பொருள் விற்பனையாளரான சதிஷ் பாபுவுக்கு பேரம் பேசி விற்றதும் தெரியவந்தது.


இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்துவதற்காக சதீஷ்பாபு பதுக்கி வைத்திருந்த சிலைகள் மீட்கப்பட்டன. கைதான 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.