மணமக்களுக்கு “வெங்காயம்” பரிசு அளித்த நண்பர்கள்


வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதை குறிக்கும் விதமாக கடலூரில் திருமண விழா ஒன்றில் மணமக்களுக்கு அவர்களது நண்பர்கள் வெங்காயத்தை திருமண பரிசாக அளித்தனர்.


சப்ரீனா, ஷாகுல் என்ற அந்த மணமக்களின் நண்பர்கள் ஒன்றிணைந்து இந்த வெங்காயப் பரிசை அளித்துள்ளனர். அண்மைக்காலமாக திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்வுகளில் வெங்காயத்தை பரிசாக வழங்கி அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றுவது அதிகரித்து வருகிறது.