மத்திய அரசுக்கான வரி வருவாயை மேலும் அதிகரிக்கச் செய்திடும் வகையில், சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களை மாற்றியமைக்க, ஜி.எஸ்.டி கவுன்சில் முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
தற்போதுள்ள 5, 12, 18, 28 சதவிகிதம் என்ற அளவில் உள்ள 4 வகையான ஜி.எஸ்.டி வரி விகிதங்களை, 8, 18, 28 விழுக்காடு என்ற அளவில், மூன்று வகையான வரி விகிதங்களாக மாற்றியமைக்க, ஜி.எஸ்.டி கவுன்சில் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மதிப்புக்கூட்டப்பட்டு, தரம் உயர்த்தப்பட்ட உணவு பொருட்கள், மொபைல் போன்கள், பீட்ஸாக்கள், விமான பயணம், குளிரூட்டப்பட்ட ரயில் பயணம், சொகுசு கப்பல் பயணம், உயர்நிலை மருத்துவமனை அறைகள், ஓவியங்கள், பிராண்டட் ஆடைகள், உயர்ரக பட்டு மற்றும் கைத்தறி ஆடைகள் உள்ளிட்டவற்றின் ஜி.எஸ்.டி வரி விகிதங்களை உயர்த்த, ஜி.எஸ்.டி கவுன்சில் முடிவெடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.