ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் தலைவி படத்துக்கும், குயின் இணையதள தொடருக்கும் தடை விதிக்க கோரும் மனு மீதான தீர்ப்பை சென்னை நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
கங்கனா ரனாவத் நடிக்கும் "தலைவி" என்ற படத்தை ஏ.எல்.விஜய்-யும், ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் "குயின்" என்ற இணையதள தமிழ் தொடரை கவுதம் வாசுதேவ் மேனனும் இயக்கி வருகின்றனர்.
இந்நிலையில், தனது அனுமதியில்லாமல் அவற்றை தயாரிக்கவும், விளம்பரப்படுத்தவும், திரையிடவும் தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகளான ஜெ.தீபா உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.