சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான கூட்டணி மற்றும் இட ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர். புதிய நீதிக் கட்சி சார்பில், அதன் தலைவர் ஏ.சி. சண்முகம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று, பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், உள்ளாட்சித் தேர்தலில், திமுக தோல்வியைத் தழுவுவது நிச்சயம் என்றார். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால் நீதிமன்றத்தை நாடாமல் திமுக மக்களை சந்திக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.