திருவண்ணாமலை தீப திருவிழா: தேர்கள் புதுப்பிக்கப்பட்டு கலசங்கள் பொருத்தும் பணி நிறைவு


திருவண்ணாமலையில் சனிக்கிழமையன்று பஞ்ச மூர்த்திகளின் மகா ரத தேரோட்டத்தையொட்டி தேர்கள் புதுப்பிக்கப்பட்டு கலசம் பொறுத்தும் பணிகள் நிறைவு பெற்றது.


பஞ்சபூத தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றது.


இதில் முக்கிய நிகழ்வான மகா ரத தேரோட்டம் வரும் 7 ம் தேதி சனிக்கிழமை  நடைபெற உள்ளது. இதில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன், பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி 4 மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள்.