திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது...


கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி,  திருவண்ணாமலை அண்ணாமலையார் சன்னதியில் இன்று அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் நடைபெறும் மகாதீபத்தை தரிசிக்க பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழா ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10ம் நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி, முருகர் சன்னதிஉள்ளிட்ட மற்ற சன்னதிகளிலும் தீபம் ஏற்றப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 6 மணியளவில் கோவின் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது.


இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விழாவையொட்டி அண்ணாமலையார் கோவில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.