கே.எஸ்.ஆர் கல்லூரி வளாகத்தில் பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி வளாகத்தில் பேருந்தில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


கே.எஸ்.ஆர் கல்லூரி வளாகத்தில் பேருந்துகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதன் அருகே பழுதடைந்த பேருந்து ஒன்றில் வெல்டிங் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது.


அப்பொழுது எரிபொருள் டேங் அருகே விழுந்ததீப்பொறியால் தீ பற்றி எரிந்ததை அடுத்து மாணவ, மாணவிகள் அலறியடித்து ஓடினர். பேருந்து முழுவதும் மளமளவென பரவிய தீ கரும்புகையுடன் கொளுந்துவிட்டு எரிந்தது.


இதை கண்ட கல்லூரி பணியாளர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையே விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.