உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி


உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் என்றும், அதில், ஆளும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி, மாபெரும் வெற்றிப்பெறும் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.


சேலம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகளை சந்தித்து, உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் பேசினார்.


பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித் தேர்தல் தோல்வி பயம் காரணமாகவே, திமுக தலைவர் ஸ்டாலின், நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.